"நானே அவர்" என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் (நித்தியமான நரகத்தில்) என்றார். - யோவான் 8:32
இது மனுக்குலம் முழுவதும் சந்திக்க வேண்டிய ஒரு கூற்று. அவரை நிராகரித்த தருவாயில், அவர் யூத மதத் தலைவர்களிடம் கூறிய கூற்று. அதி முக்கியமானதாகும். இன்றைய ஆவிக்குரிய வட்டாரங்களிலும் கூட அநேகர் இதைக் குறித்து யோசிப்பதுமில்லை, கவலை படுவதுமில்லை, சிந்திப்பதும் கிடையாது.
கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகள்; அதாவது பைபிளில் புதிய ஏற்பாட்டுக்கும், பழைய ஏற்பாட்டுக்கும் இடையில், யூதர்களுக்கு வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தங்கள் தேவனிடத்திலிருந்து எந்த விதமான தூதும், தீர்க்க தரிசிகளும் எழும்பவில்லை. அது அவர்களுக்கு ஒரு இருண்ட யுகமாகவே இருந்தது.
அப்படிப்பட்ட நாட்களில் திடீரென்று தேவதிட்டத்தின் படியும், தீர்க்க தரிசனத்தின் நிறைவேறுதலாகவும், தேவ தூதனின் கூற்றின் படியும் யாவரும் வியக்கத் தக்க வண்ணம் யோவான் ஸ்நானகன் இஸ்ரவேலின் சரித்திரத்தில் தோன்றினார். அவர் தன்னை இஸ்ரவேலர்களுக்கு தேவனுடைய தீர்க்கதரிசியாக வெளிப்படுத்தின போது, மக்களும் மதத் தலைவர்களும் வியக்கத் தக்க வண்ணம் "வனாந்தரத்தில் கூப்பிடும் சத்தமாக" காணப்பட்டார். அவரின் உணவும் உடையும் கூட யாவரும் வியக்கத் தக்க வண்ணம் இருந்தது.
இவரின் செய்தி: இவரின் செய்தியோ மிகவும் காரசாரமாகவும், வல்லமை மிக்கதாகவும், யாவருக்கும் நம்பிக்கை ஊட்டுவதாகவும் இருந்தது. ஜனங்கள் யாவரையும் மனம் திரும்ப அழைத்தார். மனம் திரும்புதலின் அடிப் படையிலும், பாவ அறிக்கையின் அடிப்படையிலும் வந்த யாவருக்கும் திருமுழுக்கு (ஸ்நானம்) கொடுத்தார். ஆனால் மதத் தலைவர்கள் இவரிடம் வருவதை கண்டபோது, முகுந்த வீரியத்தோடு, விரியன் பாம்பு குட்டிகளே, வரும் கோபத்துக்கு தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? மனம் திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள் என்றார்.
மனம் திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்பது அவருடைய தொடக்க உபதேசமாயிருந்தது. இப்படிப் பட்ட உபதேசங்களுடன் திரு முழுக்கு கொடுத்துக் கொண்டிருக்கையில். யூத மதத் தலைவர்கள், நீர் யார்? நீர்தான் வர வேண்டிய "மேசியாவோ" என்று அவரை வினவ, அவர் தயக்கமின்றி ஆணித்தரமாக, "நான் அவரல்ல" என்று கூறினார்.
யோவான் இயேசுவை பற்றி: நான், வர இருக்கிறவராகிய அவர் அல்ல. அவர் எனக்கு முன்னிருந்தவர், அவர் என்னிலும் மேலானவர். மேலும் மிக தாழ்மையுடன், நான் அவரின் பாத ரட்சையின் வாரை அவிழ்க்கக் கூட பாத்திரன் அல்ல என்று உரைத்தார். இவ்வண்ணமாக இருந்து கொண்டிருந்த போது, இயேசு ஸ்நானம் பெரும் படி வந்தார்.அதற்கு மறுப்பு தெரிவித்த பின்னர், திருவுள சித்தத்தின் படியாக அனுமதி கொடுத்தார். இயேசு ஸ்நானம் பெற்ற போது ஆவியானவர் புறாவைப் போல இயேசுவின் மீது அமர்ந்ததை முன்னறிவின் படி உணர்ந்து; இவரே, "இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக் குட்டி"